பள்ளி கல்வி துறையில் டிஜி லாக்கர் வசதி வருமா? - ஆசிரியர் மலர்

Latest

 




03/06/2023

பள்ளி கல்வி துறையில் டிஜி லாக்கர் வசதி வருமா?

gallerye_022538982_3337578

பள்ளிக்கல்வி துறையில், சான்றிதழ்கள் வழங்குவதில், 'டிஜி லாக்கர்' போன்ற இணையவழி வசதி அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில், 38 ஆயிரம் அரசு பள்ளிகள் உட்பட, 58 ஆயிரம் பள்ளி கள் செயல்படுகின்றன.


இவற்றில், 10ம் வகுப்பில் 9.75 லட்சம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில் தலா 8.50 லட்சம் பேர் என, 27 லட்சம் பேர் வரை பொது தேர்வு எழுதுகின்றனர்.


இவர்கள் தவிர, ஆண்டுக்கு, 25 ஆயிரம் பேர் வரை தனி தேர்வர்களாக எழுதுகின்றனர்.


Join Telegram


இவர்களுக்கு, அரசு தேர்வுத் துறை சார்பில், தற்காலிக மதிப்பெண் பட்டியல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.


பள்ளிகள் சார்பில், 'டிசி' எனப்படும் மாற்று சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் இன்னும் காகிதமாகவே உள்ளன.


மத்திய அரசு கல்வி துறை சார்பில், பொது தேர்வு எழுதிய மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை எப்போதும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில், 'டிஜி லாக்கர்' தளம் உள்ளது.


இந்த தளத்தில் பதிவேற்றப்பட்ட சான்றிதழ்கள், நிரந்தரமாக அதிலேயே இருப்பதால், வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் நிறுவனங்களும், உயர் கல்வி நிறுவனங்களும், கடவுச் சொல்லை பயன்படுத்தி, சான்றிதழின் உண்மை தன்மையை ஆராய முடியும்.


இதை பின்பற்றி, தமிழக பள்ளிக்கல்வி துறையிலும், டிஜி லாக்கர் தளத்தை துவங்க வேண்டும் என, பள்ளிகள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459