ஆங்கில ஆய்வகம் செயல்படுகிற 6,029 அரசு பள்ளிகளுக்கு ஹெட்ஃபோன் சாதனம் - கல்வித் துறை சார்பில் விநியோகம் - ஆசிரியர் மலர்

Latest

12/06/2023

ஆங்கில ஆய்வகம் செயல்படுகிற 6,029 அரசு பள்ளிகளுக்கு ஹெட்ஃபோன் சாதனம் - கல்வித் துறை சார்பில் விநியோகம்

1012078

ஆங்கில மொழி ஆய்வகங்கள் இயங்கி வரும் 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு ஹெட்ஃபோன் சாதனங்கள் வழங்கப்பட உள்ளன.
Join Telegram


இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் (இடைநிலை) பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை (பேசுவது, கேட்பது, எழுதுவது, கவனிப்பது) மேம்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலமொழி ஆய்வகங்கள் ஏற்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து, மொழிகள் ஆய்வகத்துக்காக தனி இணையதளத்தை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்.


தற்போது அனைத்து ஆங்கிலமொழி ஆய்வகங்களை மேம்படுத்தும் வகையில், மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஹெட்ஃபோன் சாதனங்களும், 2 ஹெட்ஃபோன் சாதனங்களை ஒரே கணினியில் பயன்படுத்தும் வகையில் இணைப்பு கேபிள் சாதனமும் வழங்கப்பட உள்ளன.


அந்த வகையில், அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 ஹெட்ஃபோன், 10 இணைப்பு கேபிள், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தலா 40 ஹெட்ஃபோன், 20 இணைப்பு கேபிள் வழங்கப்படும்.


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் வாயிலாக இந்த சாதனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவை மாவட்டகல்விஅலுவலகங்களுக்கு (இடைநிலை) விநியோகிக்கப்படும். அங்கிருந்து சம்பந்தப்பட்ட பள்ளிகள் அந்த சாதனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459