JEE தேர்வு நிபந்தனை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - ஆசிரியர் மலர்

Latest

30/05/2023

JEE தேர்வு நிபந்தனை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

 பிளஸ்2 தேர்வில், 75 சதவீத மதிப்பெண் பெற்றால் தான், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையங்களில் சேர முடியும் என்ற நிபந்தனையை எதிர்த்த வழக்குகளை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


ஐ.ஐ.டி.,யில் சேருவதற்காக, ஜே.இ.இ., எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் அதிக மதிப்பெண் பெற்றாலும், பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம், 75 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்து சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


இதை விசாரித்த நீதிபதிகள் சுதான்ஷு துலியா, கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:


கொரோனா காலத்தில் சில சலுகைகள் அளிக்கப்பட்டன. அதே நேரத்தில், இந்த நிபந்தனைகள் ஏற்கனவே உள்ளவை. இந்த விவகாரத்தில் தலையிட முடியாது.


இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459