மாறுதல் கலந்தாய்வு முறைகேடுகளை கண்டித்து ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் - ஆசிரியர் மலர்

Latest

30/05/2023

மாறுதல் கலந்தாய்வு முறைகேடுகளை கண்டித்து ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

 


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகரில் மாறுதல் கலந்தாய்வு முறைகேடுகளை கண்டித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கலந்தாய்வு மையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.


விருதுநகர் கல்வி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொருளாளர் செல்வகணேசன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் பிரதீபா, இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாவட்ட தலைவர் விஜயபாலன் பேசினர்.


மாவட்ட செயலாளர் வைரமுத்து பேசுகையில், கலந்தாய்வுக்கு முன்பே காலிப்பணியிடம், கூடுதல் பணியிடம் அனைத்தும் நிர்வாக மாறுதல் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது.


ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் மூலம் ஆசிரியர்கள் காத்திருக்க, வெளிமாவட்டத்தின் மூலம் நிர்வாக மாறுதல் ஆணை வழங்கப்பட்டதை கண்டிக்கிறோம். அனைத்து பதவி உயர்வுக்கும் டெட் அவசியமில்லை என்பதை அரசுகொள்கை முடிவாக எடுக்க வேண்டும், என்றார்.

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459