பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வை கைவிட வலுக்கும் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

20/05/2023

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வை கைவிட வலுக்கும் கோரிக்கை

 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் விதிமுறைகளுக்கு மாற்றாக பள்ளிக்கல்வித்துறை கலந்தாய்வை நடத்துவதால் அதனை உடனே கைவிட வேண்டும் என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் கலந்தாய்வு நடக்கும் நாளான திங்கள் அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Join Telegram


முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைத்தான்  உபரியாக வேறு பள்ளிக்கு அனுப்ப வேண்டும் எக்காரணம் கொண்டும் பட்டதாரி ஆசிரியர்களை உபரிப்பணியிடம் என்று வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என்பதை கண்டித்து எதிர்வரும் திங்கள்கிழமை தமிழக முழுவதும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியோடு நடைபெற இருக்கிறது.

அவரது பேட்டி வீடியோ....


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459