10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. சாதித்த அரசுப் பள்ளிகள்... 1,026 பள்ளிகளில் 100% தேர்ச்சி...! - ஆசிரியர் மலர்

Latest

19/05/2023

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. சாதித்த அரசுப் பள்ளிகள்... 1,026 பள்ளிகளில் 100% தேர்ச்சி...!

 


தமிழ்நாட்டில்  10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.inwww.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வாயிலாக அறிந்துகொள்ளலாம். 91.39 சதவிகிதம் பேர் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 (94.66%) பேரும், மாணவர்கள் 4,04,904 (88.16%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Join Telegram


வழக்கம் போல இந்த முறையும் மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 90.07% ஆக இருந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.

மொத்தமுள்ள 12,638 பள்ளிகளில்  100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3,718 ஆகும். இவற்றில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,026 ஆகும்.

1 அரசுப் பள்ளிகள் - 87.45%

2. அரசு உதவிப் பெறும் பள்ளிகள் - 92.24%

3. தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 97.38%

4. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் - 91.58%

5. பெண்கள் பள்ளிகள் - 94.38%

6 ஆண்கள் பள்ளிகள் - 83.25%

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459