TNTET PAPER 2 - தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் சார்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு - ஆசிரியர் மலர்

Latest

13/04/2023

TNTET PAPER 2 - தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் சார்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு


IMG_20230413_175227

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 - ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 - ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- II ற்கான கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) 03.02.2023 முதல் 15.02.2023 வரை இருவேளைகளில் நடத்தப்பட்டது. இத்தேர்வில் 2,54,224 தேர்வர்கள் கலந்து கொண்டனர். இத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் 28.03.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.


15,430 தேர்வர்கள் இத்தேர்வில் தகுதி பெற்றுள்ளனர் . 23.07.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கைச் செய்தியின்படி , அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 24.07.2022 முதல் 27.07.2022 வரை ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டது.

 எனவே , விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள தற்போது அளிக்கும் கோரிக்கையின் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது OT OUT தெரிவிக்கப்படுகிறது.


 தற்போது , விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II -ல் தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சான்றிதழ் ( Certificate ) 13.04.2023 இன்று முதல் மூன்று மாதம் வரை பதிவிறக்கம் செய்திடலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459