JEE அட்வான்ஸ்டு தேர்வு 30ல் ஆன்லைன் பதிவு துவக்கம் - ஆசிரியர் மலர்

Latest

25/04/2023

JEE அட்வான்ஸ்டு தேர்வு 30ல் ஆன்லைன் பதிவு துவக்கம்

 ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கு, வரும் 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.


பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில், பட்டப்படிப்பில் சேர, ஜே.இ.இ., பிரதான நுழைவு தேர்வில் பங்கேற்றுள்ளனர்.


எட்டு லட்சத்துக்கு மேற்பட்டோர் எழுதியுள்ள இந்த தேர்வின் முடிவுகள், விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.


தேர்வில் தேர்ச்சி பெற்று, மதிப்பெண்ணில் முன்னிலை வகிப்போர், ஐ.ஐ.டி.,யில் மாணவர் சேர்க்கை பெற, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


வரும் கல்வி ஆண்டுக்கான இந்த அட்வான்ஸ்டு தேர்வு, ஜூன், 4ல் நடக்க உள்ளது.


இந்த தேர்வில் பங்கேற்பதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, வரும், 30ம் தேதி துவங்கும் என, தேர்வை நடத்தும் குவஹாத்தி ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது. மே, 7க்குள் பதிவுகளை முடித்துக் கொள்ள, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


விபரங்களை, https://jeeadv.ac.in/imp_dates.html என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459