நீட் தேர்வுக்கு 21 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் - ஆசிரியர் மலர்

Latest

 




24/04/2023

நீட் தேர்வுக்கு 21 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

 2023-24 கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 499 நகரங்களில் மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது.


இந்த தேர்வை எழுத மொத்தம் 20.87 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.57 லட்சம் அதிகமாகும். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.


இதையடுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் உள்ளிட்ட தகவல்களை என்டிஏ விரைவில் வெளியிடும். கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in https://nta.ac.in/ ஆகிய இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம் என துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459