ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகும் கணினி அறிவியல் பாடம்..வேதனை குரல் முதல்வரின் காதில் கேட்குமா? - ஆசிரியர் மலர்

Latest

12/04/2023

ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகும் கணினி அறிவியல் பாடம்..வேதனை குரல் முதல்வரின் காதில் கேட்குமா?

 சமச்சீர் கல்வியில் கலைஞரால் கொண்டுவரப்பட்ட ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அரசு பள்ளி வாசலுக்கு கூட செல்லவில்லை என்று தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று வரை அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் கிடைக்கப் பெறவில்லை என்பதை நிதர்சன உண்மை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாகசங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வெ.குமரேசன், வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கு 31.3.2023 அன்று பள்ளிக்கல்வி மானிய கோரிக்கை நடைபெற்றது சமச்சீர் கல்வியில் கணினி பாடத்தைப் பற்றி பேசியமைக்கு கணினி ஆசிரியர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் 1998 ஆம் ஆண்டு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்தார். அதோடு நின்று விடாமல் அரசுப் பள்ளியின் கலைத் திட்டங்களை மாற்றிய கலைஞர், தற்போது வரை அரசு பள்ளியில் 5 பாடங்களை மட்டும் மாற்றி மாற்றி புதிய பாடங்களாக பாடத் திட்டத்தை மட்டும் மாற்றிக் கொண்டிருக்கும் வேலையில் கலைஞர் அவர்கள் 2011 ஆம் ஆண்டு கலைத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தார் ஆறாவது பாடமாக கணினி அறிவியல் பாடத்தையும் கொண்டு வந்தார்.


அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் கணினி கல்வி பெறவேண்டும் என்ற உயரிய நோக்கில் 2006 முதல் 2011 வரை தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது. முதல்வர் கலைஞர் அவர்களால் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாகவும் ஆறாவது பாடமாக தோற்றுவிக்கும் நோக்கில்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கொண்டு வந்தார். அதற்காக பல கோடி செலவில் புத்தகங்களும் அச்சிடப்பட்டன கடந்த 2011ஆம் ஆண்டு கல்வியாண்டின் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக அறிமுகம் செய்யும் தருவாயில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அதிமுக அரசு சமச்சீர் கல்வியில் கொண்டு வந்த கணினி அறிவியல் படத்தையும் பாட புத்தகங்களை மட்டும் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த திட்டம் என்பதால் அரவமின்றி நீக்கிவிட்டது. கணினி அறிவியல் பாடமும் அரசு பள்ளிக்கு இன்று வரை எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது.


சமச்சீர் கல்வியில் தனி பாடமாக இருந்த கணினி அறிவியல் பாடத்தை நீக்கிவிட்டு புதிய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்துடன் வெறும் மூன்றே மூன்று பக்கங்களை மட்டும் இணைத்துள்ளது. சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடம் நீக்கப்பட்டு இதோடு 13 வருடங்கள் ஆகின்றது. கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் கடந்த 13 ஆண்டுகளாக அரசுப் பள்ளிக்கு கொண்டு வர பல்வேறு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்கள் பல அமைச்சர்களிடம் மனு கொடுத்து மாய்ந்தது எங்கள் கரங்கள் மட்டுமல்ல கணினி ஆசிரியர் மனமும் தான் சமச்சீர் கல்வி கணினி அறிவியல் பாட புத்தகங்களை குப்பைக் கழிவுகளாக மாற்றப்பட்ட அவலம் அதற்கான RTI தகவல்படி,பல கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்ட கணினி அறிவியல் பாட புத்தகங்கள் பாட புத்தகங்களை அரசு பள்ளியின் வாசலுக்கு கூட எட்ட விடாமல் குப்பை கழிவுகளாக மாற்றம் செய்தது என்ற அதிர்ச்சி தகவலை ஆட்சியையின் வாயிலாக கணினி ஆசிரியர்கள் பெற்று அதிர்ச்சி அடைந்தோம் அரசு பள்ளியில் மாணவர்களும் கணினிக் கல்வி என்பது கேள்விக்குறியான நிலையில் இன்று வரை இருந்துள்ளது.


சமச்சீர் கல்வி கணினி அறிவியல் பாட புத்தகங்களை பின்பற்றி கேரளா அரசு ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை தனிப் பாடமாகவும்.கட்டாய பாடமாக வைத்து பொதுத்தேர்வும் நடத்தி வருகிறது. பொதுத்தேர்வில் கணினி பாடத்தில் தேர்ச்சி பெற்றால் தான் பத்தாம் வகுப்பையே தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையில் கல்வித்தரம் உயர்ந்து கொண்டே போகிறது. தகவல் தொழில்நுட்பத்தை உயர்த்தி பிடிக்கும் தமிழக அரசு எப்போது அரசு பள்ளிக்கு கலைஞரின் நல்ல திட்டங்களை கொண்டு வரும்.


இன்று வரை அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் கிடைக்கப் பெறவில்லை என்பதை நிதர்சன உண்மை.

கருணாநிதியின் திட்டங்களை எல்லாம் மாண்புமிகு முதல்வர் கொண்டு வருவதாக தேர்தல் அறிக்கையாக கூறியிருந்தார்.சமச்சீர் கல்வியில் வெளிவந்த கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிக்கு கொண்டு வந்து கடந்த 2016 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வி வளாகத்தில் கணினி ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருந்தபோது முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் கணினி ஆசிரியர்களை போராட விடாதீர்கள் அவர்களுக்கு உரிய பணிவாய் வழங்குங்கள் என்று அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.நினைவாக்கும் வகையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அனைத்து நிலைகளிலும் பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை தொகுப்பூதிய அடிப்படையிலாவது நியமனம் செய்ய வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


திரு வெ.குமரேசன்,

மாநிலப் பொதுச் செயலாளர் ,

9626545446 ,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459