ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மே'23 : பருந்துப் பார்வை! - ஆசிரியர் மலர்

Latest

27/04/2023

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மே'23 : பருந்துப் பார்வை!

 தொடக்கக் கல்வித் துறையின் 2022-23-ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. அதில் இருப்பதும் இல்லாததும் குறித்து பருந்துப் பார்வையாக. . .


Minimum 1Year Service-க்கு டாட்டா!


மாறுதலுக்கு விண்ணப்பிக்க தற்போது பணியாற்றும் பள்ளியில் குறைந்தது ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் கடந்த 4 மாதங்களாக நிருவாக மாறுதல் எனும் பெயரில் பல இலட்சங்கள் செலவு செய்து தென்மாவட்டங்களுக்குள் சென்ற ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்தமுறை இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் எவ்வித முறையான ஆணையுமின்றி சமூகநீதிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட Appointment Seniority மூலம் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் உட்பட சென்றமுறை மாறுதல் பெற்ற அனைவரும் ஒன்பதே மாதங்களில் மீண்டும் மாறுதல் கோரி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


BT PROMOTION இல்லை!


தொ.க.துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்குக் கலந்தாய்வு நடத்த தேதி அறிவிக்கப்படவில்லை. TET தொடர்பான வழக்கு காரணமாகத்தான் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்குமாயின் அதுகுறித்த தகவல் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்தவிதத் தகவலும் செயல்முறைகளில் இல்லை.


30.01.2020-ல் வெளியான ப.க.து அரசாணை 12-ல் BT பணியிடத்தை முதலில் Promotion மூலமும், பின்னர் Transfer மூலமும், இவ்விரண்டிலும் தகுதியான நபர்கள் இல்லை என்றால் மட்டுமே Direct Recruitment மூலமும் நிரப்ப வேண்டும் என்றுதான் தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை சார்நிலைப் பணி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பதால், நேரடியாக TET-ஐ இதில் புகுத்த இயலாது. மேலும் RTE 2009 சட்டமும் BT நேரடி நியமனத்திற்குத்தான் TET தேவை என்று வரையறுத்துள்ளது எனும் போது பதவி உயர்வுப் பணியிடங்களுக்குத் தகுதித் தேர்வுகளைக் கட்டாயமாக்க வேண்டிய அவசியமே இல்லை. இதை மீறி வழக்காடு மன்றம் தலையிடுகிறது என்றால் அரசின் நிலைப்பாட்டில் தெளிவு தேவை. ஆனால், BT PROMOTIONக்கு தேதி வழங்காதது குறித்தோ / BT PROMOTION குறித்தோ எவ்வித குறிப்புமே செயல்முறைகளில் இல்லை எனும்போதே அரசு எத்தகைய தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.


இல்லை! இல்லை!!


❌ இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கான முன்னுரிமை Station Seniorityயா? / Appointment Seniorityயா? என்ற விபரம் வழக்கம்போல இம்முறையும் எழுத்தில் இல்லை.


❌ மலைப்பாங்கான, போக்குவரத்து வசதி குறைந்த, ஆசிரியர் பற்றாக்குறையுள்ள & கற்றலில் பின் தங்கிய ஒன்றியங்களாகக் கடந்தமுறை அடையாளமிடப்பட்ட சிறப்பு முன்னுரிமை ஒன்றியங்கள் (Priority Blocks) தொடர்பான குறிப்புகள் இல்லை.


❌ ஆசிரியர்களுக்கான சிறப்பு முன்னுரிமை (Special Priority) தொடர்பான வரிசை முறைப் பட்டியல் பற்றிய குறிப்புகள் இல்லை. கடந்த ஆண்டின் வரிசை முறையில் முன்னுரிமை வழங்கப்படுமா / மாற்றமிருக்குமா என்பது Seniority List வந்தால்தான் தெரியவரும்.


❌ பதவி உயர்வுக் கலந்தாய்வு நடத்தப்படப்போவது 1.1.22 தேர்ந்தோர் பட்டியல் படியா? 1.1.23 தேர்ந்தோர் பட்டியல் படியா? என்ற விபரம் இல்லை.


❌ நலத்துறைப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையில் இணைத்தது தொடர்பான குறிப்புகளோ, அப்பள்ளிகளுக்கான கலந்தாய்வு குறித்தோ, அதன் காலிப்பணியிடங்கள் காட்டப்படுமா என்றோ குறிப்பிடப்படவில்லை.


மாறுதலுக்கு விண்ணப்பித்தல் & கலந்தாய்வு நடைமுறை :


👉 EMIS Web page-ல் Individual ID வழியே ஏப்.27 முதல் மே.1 மாலை 6:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


👉 ஆசிரியர் பற்றிய விபரங்களில் தவறுகள் இருப்பின் EMIS Web page-ல் School ID வழியே திருத்தம் செய்தபின் விண்ணப்பிக்க வேண்டும்.


👉 இறுதியாக மாறுதல் பெற்றோர் மாறுதல் ஆணையையும், இதுவரை மாறுதலே பெறாதோர் பணி நியமன ஆணையையும் கட்டாயம் Upload செய்ய வேண்டும்.


👉 வழக்கம் போல சிறப்பு முன்னுரிமைக்கான ஆவணங்களைச் சார்ந்தோர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


👉 ஆசிரியரது விண்ணப்பங்களுக்கு HM தனது ID-ல் Approval அளித்து அதனை 3 பிரதிகளில் Print செய்து ஒன்றை ஆசிரியருக்கும் மற்ற 2-ஐ BEO-விற்கும் கூடுதல் ஆவண நகல்களுடன் அளிக்க வேண்டும். BEO தன்னிடம் வரப்பட்ட 2-ல் ஒரு பிரதியை DEO-விற்கு அளிக்க வேண்டும்.


👉 HM விண்ணப்பங்களுக்கு BEO Approval அளித்து அதனை 3 பிரதிகளில் Print செய்து ஒன்றை ஆசிரியருக்கும் மற்ற 1-ஐ DEO-விற்கும் கூடுதல் ஆவண நகல்களுடன் அளிக்க வேண்டும்.


👉 மாவட்ட மாறுதலில் பணியாற்றும் மாவட்டத்தைத் தவிர்த்து பிற மாவட்டங்களை மட்டுமே தேர்ந்தெடுக்க இயலும்.


👉 மாறுதலில் ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு. Resultant Vacancy முறை கிடையாது.


👉 40% மாற்றுத்திறனாளிகளை பணி நிரவல் செய்யக்கூடாது. 

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459