போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இலவச பயிற்சி பெறுவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி. நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போர் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கும் பயிற்சி மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரியில் 500 பேருக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதேபோல் சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 பேருக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படுகிறது.
www.civilservicecoaching.com-ல் இன்று முதல் மார்ச் 31 வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஏப்.10ம் தேதி தொடங்கி 6 மாதங்கள் நடைபெற உள்ளன. வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வாராந்திர வேலை நாட்களில் நடைபெறும். பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7373532999, 9894541118, 8667276684 மற்றும் 8489334419 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment