ஆசிரியர் பணி: போட்டி தேர்வு கூடாது - ஆசிரியர் மலர்

Latest

 




28/03/2023

ஆசிரியர் பணி: போட்டி தேர்வு கூடாது

 டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை அறிக்கை:


இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, 2012 முதல், ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கிறது. 2012, 2013ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், ஆசிரியர் வேலை கிடைத்தது. பின், வேலை கிடைக்கவில்லை..JoinTelegram


தொடர்ந்து, 2014ம் ஆண்டில் தகுதி தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 'வெயிட்டேஜ்' முறை அமல்படுத்தப்பட்டது. இதற்கு தேர்வர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது.


இதையடுத்து, அதற்கு பதில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆசிரியர் பணி நியமனத்துக்கு மற்றொரு போட்டி தேர்வு நடத்தப்படும் என, 2018ல் அறிவிக்கப்பட்டது.


இதனால், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள், பணி வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டிய நிலையில் உள்ளனர்.


'அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட போட்டி தேர்வு ரத்து செய்யப்படும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.


எனவே, ஆசிரியர் நியமனத்துக்கான போட்டி தேர்வை ரத்து செய்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459