பிளஸ் 2 கணிதம் கேள்விகள் கடினம் - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

28/03/2023

பிளஸ் 2 கணிதம் கேள்விகள் கடினம்

 பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணித கேள்விகள் கடினமாக இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் ராஜ் கூறியதாவது:


பத்தாம் வகுப்பில் 'ஆல் பாஸ்' பெற்று, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, கொஞ்சம் எளிமையான வினாக்களை வைத்திருக்கலாம்..JoinTelegram


கட்டாய வினா பகுதி கடினமாக இருந்ததால், மாணவர்கள் அதை பார்த்து பயந்திருந்தால், மற்ற கேள்விகளுக்கு பதில் எழுத சிரமப்பட நேரிட்டிருக்கும்.


ஒரு மதிப்பெண்ணில், 13 கேள்விகள் பயிற்சி பகுதியில் இருந்தும், ஏழு கேள்விகள், பாடத்தின் உள்பகுதியில் இருந்தும் கேட்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையாது. ஆனால், 'சென்டம்' மதிப்பெண் எடுப்போர் குறைய வாய்ப்புள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459