ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த திட்டங்களுக்கு பல்வேறு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் நன்றி - ஆசிரியர் மலர்

Latest

04/03/2023

ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த திட்டங்களுக்கு பல்வேறு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் நன்றி

 .JoinTelegram ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த திட்டங்களுக்கு பல்வேறு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்!

IMG_20230304_145253

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று ( 4.3.2023 ) தலைமைச் செயலகத்தில் , தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் , தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி , தமிழகத் தமிழாசிரியர் கழகம் , தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றங்கள் , ஜே.எஸ்.ஆர் . தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி , தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் , தமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர் நலக் கூட்டமைப்பு , டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் , இடைநிலை பதிவு மூப்பு இயக்கம் , நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் , தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கம் , தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் , தமிழ்நாடு வேளாண்மைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் , தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து , அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள் , அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை , உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு 50,000 ரூபாய் வரை உயர்வு , அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா போன்ற திட்டங்களை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர.. உடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உள்ளார்.

Thanks to CM.pdf - Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459