.JoinTelegramபள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி விற்பனை செய்தது குறித்து அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோடி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி, அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்க கூடிய மாணவர்களின் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வைத்துள்ளது. இந்த விபரங்களை தனியார் கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் இருக்க கூடிய நபர்கள் விற்பனை செய்ததாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பாக சமூக வலைதளத்தில் ஆடியோ பதிவானது வெளியானது. அதன் அடிப்படியில் காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிராம் போலீசார் விசாரணை மேற்கொள்ள காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment