எச்.3என்-2’ வைரஸ் காய்ச்சல் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது. இது பொதுமக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. .JoinTelegram
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் சளி, இருமலுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர்காய்ச்சலுக்கு ‘எச்.3என்-2’ என்ற வைரஸ்தான் காரணம் என்று இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் தொடர் இருமல், தொண்டை வலி, உடல் வலி ஏற்படும். இது உயிருக்கு ஆபத்தானது இல்லை. பாராசிட்டமால் மாத்திரையே இதற்கு போதும் என்றும், அதிக நீர் அருந்துவது, முகக்கவசம் அணிவதன் மூலம் இந்த காய்ச்சலைத் தடுக்கலாம் என்றும் இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment