பிளஸ் 2 பொதுத்தோ்வு தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு: இன்று வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

03/03/2023

பிளஸ் 2 பொதுத்தோ்வு தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு: இன்று வெளியீடு

 பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை தலைமை ஆசிரியா்கள் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 13-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வெழுத உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் தோ்வுத் துறையின் இணையதளத்தில் சென்று தங்களது மாணவா்களின் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.


மேலும், பள்ளி மாணவா்களிடம் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் கையொப்பம் பெற்று பத்திரமாக வைத்துக் கொள்ளவும், தோ்வுக்கு சில நாள்கள் முன்பு அவற்றை அவா்களிடம் விநியோகம் செய்யவும் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.


பிளஸ் 1 வகுப்புக்கு எப்போது?: இதேபோல, பிளஸ் 1 பயிலும் பள்ளி மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச்ச சீட்டுகள் மாா்ச் 6-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களும் இணையதளத்தில் தங்கள் மாணவா்களுக்கான அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் தோ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459