பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை: ஓடும் இரயிலில் முதல்வரிடம் பரிந்துரைத்த கல்வி அமைச்சர் - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

03/02/2023

பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை: ஓடும் இரயிலில் முதல்வரிடம் பரிந்துரைத்த கல்வி அமைச்சர்

பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் மனசு திட்டத்திக்கு மனு அனுப்பி இருந்தோம்.அதன் விளைவாக மாண்புமிகு கல்வி அமைச்சரின் அழைப்பின் பேரில் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி சென்று அமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கையை தெரிவித்து வந்தோம். மீண்டும் அமைச்சர் அழைப்பின் பேரில் 1/2/2023 அன்று ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சிகரம் சதீஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தோம்.பணிநிரந்தரம்,ஊதிய உயர்வு,மே மாத ஊதியம்,தற்செயல் விடுப்பு,கருனைத் தொகை உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை தெரிவித்தோம். அதை கனிவுடன் கேட்ட கல்வி அமைச்சர் உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் எனக் கூறினார். இது தொடர்பாக நாங்கள் அமைச்சரை சந்தித்த அன்றே வேலூருக்கு இரயிலில் பயணம் செய்த மாண்புமிகு முதல்வரிடம் நேரில் எங்களது கோரிக்கைகள் குறித்து தெரியப்படுத்தி உள்ளார். அதன் விளைவாக முதல்வர் அறிவித்து இத்தனை நாட்களாக நடைமுறைப்படுத்தப் படாமல் இருந்த எங்களது கோரிக்கைகளில் ஒன்றான பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்விற்கான தேதி நேற்று மாலையே அறிவிக்கப்பட்டது.மேலும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வு விரைவில் முழுமைபெறும் என்னும் நம்பிக்கையையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள்  30 க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள்கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459