பி.எட்., கல்லுாரி மாணவர்களுக்கான, நான்கு கட்ட செய்முறை தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில் உள்ளகல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வின் போது, கருத்தியல் என்ற தியரி தேர்வுடன், செய்முறை தேர்வும் நடக்கும்.
அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அட்டவணை, www.tnteu.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் நான்கு கட்டங்களாக, மாவட்ட வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்வு, மார்ச், 3, 4ல் நடக்கும். இரண்டாம் கட்ட தேர்வு, மார்ச், 6, 7; மூன்றாம் கட்ட தேர்வு, மார்ச், 8, 9; நான்காம் கட்ட தேர்வு, மார்ச் 10, 11ம் தேதிகளில் நடக்க உள்ளது.
ஒவ்வொரு கட்டத்திலும் தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட கல்லுாரி மாணவியரை, செய்முறை தேர்வுக்கு தயார்படுத்துமாறு, கல்வியியல் கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment