NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/01/2023

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

 IMG-20230125-WA0009


2022-2023 - ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு ( NMMS ) 25.02.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது.


 இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 25.01.2023 என தெரிவிக்கப்பட்டது

 தற்போது , இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவசாசம் 27.01.2023 பிற்பகல் 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


 மேற்காண் விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது . மேலும் , மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்கு பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459