ஜாக்டோ - ஜியோ போராட்டம் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/01/2023

ஜாக்டோ - ஜியோ போராட்டம் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

 .com/

அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களுக்கு தயாராகும், 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.


அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பாக செயல்படுகின்றன. பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி நிலுவை தொகை, ஊதிய முரண்பாடுகள் நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


கடந்த ஆட்சியில் நடந்த போராட்டத்துக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

இதனால், தி.மு.க., அரசு வந்ததும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், தி.மு.க., அரசு பொறுப்பேற்று, ஒன்றே முக்கால் ஆண்டுகளாகி விட்ட நிலையிலும், கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.


எனவே, அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. மார்ச், 5ல், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம், மார்ச், 24ல் மனித சங்கலி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.


இதற்கான ஆயத்த மாநாடு, பிப்., 12ல் மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்காக, போராட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. போராட்டத்தை தீவிரப்படுத்த, 38 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459