மதுரை: உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளைகளை பிடித்து முதலிடம் பெற்ற வீரர் விஜய், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கப்படும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நிசான் காரை பரிசாக வென்று இருக்கும் நிலையில் முதல்முறையாக தான் காரில் ஏறப்போவதாக உணர்ச்சிகரமாக தெரிவித்து இருக்கிறார்.
ஜல்லிக்கட்டு போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜய், \"ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இதற்கு முன் பைக் வெற்றிபெற்று இருக்கிறேன். அதிகளவில் பயிற்சி செய்தேன். வலிகளை தாங்கிக்கொண்டேன். கால் சரியில்லாமல் அடிபட்டு இருந்தேன்.
இதற்கு முன் காரை வாங்கியது இல்லை. இதுதான் முதல் முறை. ரொம்ப சந்தோசமா உள்ளது. நான், என் தங்கை, அப்பா, அம்மா இதுதான் எங்கள் குடும்பம். நான் தான் குடும்பத்தின் மூத்த மகன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
மின்வாரிய ஊழியர் நான் மின்வாரியத்தில் கேங்மேனாக அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறேன். நேரம் கிடைக்கும் சமயத்தில் எல்லாம் ஜல்லிக்கட்டு பயிற்சி செய்துகொள்வேன். ஆன்லைன் முன்பதிவு முறை எங்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. எனக்கு கடைசி வரை டோக்கன் கிடைக்கவில்லை. கடைசி நேரத்தில்தான் எனக்கு கிடைத்தது.
ஜல்லிக்கட்டில் ஆள் மாறாட்டம் 287 வது டோக்கன் தான் எனக்கு கிடைத்தது. 2 முறை சிறந்த வீரருக்கான பரிசு வாங்கி இருப்பதால் எனக்கு விழாமுடி சித்தன் என்ற அண்ணன் டோக்கன் வாங்கிக் கொடுத்தார். ஆள்மாறாட்டம் நிறைய நடந்து இருக்கிறது. கமிட்டி மூலமாக டோக்கன் கொடுத்தால் அவர்கள் திறமையை வைத்து மாடுகளை பிடிப்பார்கள்.
ரூ.200 செலவு ஆன்லைன் முறையில் யார் யாரோ டோக்கன் வாங்குகிறார்கள். புதிதாக மாடுபிடிப்பவர்கள் வருகிறார்கள். இதற்கு ரூ.200 வரை செலவாகிறது. ஈ சேவை மையத்துக்கு சென்றால் ரூ.200 கேட்கிறார்கள். சத்தியமாக கொடுக்க முடியவில்லை. படிக்காதவர்கள் என்ன செய்வார்கள். அதற்கு நேரடியாக கமிட்டியை வைத்தே கொடுத்துவிடலாம்.
முதல் முறையாக காரில் பரிசு காரை நான் பார்த்தேன். இப்போதுதான் முதல் முறையாக காருக்கு பக்கத்தில் நின்று உள்ளே போய் உட்கார போகிறேன். ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அமைச்சர் மூர்த்தி ஐயாவை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும். எங்க அண்ணன் பரத் தான் அனைத்துக்கும் காரணம். அவர்கள் இல்லாவிட்டால் மாடு பிடித்திருக்கவே முடியாது.
அப்பா, அம்மா மகிழ்ச்ச்சி காலை 4 வது பேட்சில் மாடு பிடிக்க இறங்கினேன். நான் மாடு பிடித்தது தெரிந்து அப்பாவும் அம்மாவும் இங்கே வந்துவிட்டார்கள். எங்கள் உதவி பொறியாளர் எல்லோரும் போன் அடித்துக்கொண்டே இருக்கிறார்கள். போனை எடுக்க முடியவில்லை. போய்தான் அவர்களிடம் பேச வேண்டும்.\" என்று உணர்ச்சி பொங்க அவர் பேசினார்.
No comments:
Post a Comment