முதல்வருக்கு அரசு பள்ளி பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள் - ஆசிரியர் மலர்

Latest

13/01/2023

முதல்வருக்கு அரசு பள்ளி பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்

 சட்டசபையில் அறிவிப்பு வெளியிடுங்கள்:


பொங்கல் போனஸ், சம்பள உயர்வு, பணிநிரந்தரம் கேட்டு 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்:

அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை போன்றவற்றில் பணியாற்றும் 12ஆயிரம் பேருக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொங்கல் போனஸ் மனிதாபிமானத்துடன் வழங்க வேண்டும்.

11ஆண்டாக பணிபுரியும் அவர்கள் 12000 பேருக்கும் வழங்கினால் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த சந்தோஷம் அடைவார்கள்.

10 ஆண்டை கடந்தபோதும் இன்னும் அவர்கள் ₹10ஆயிரம் தொகுப்பூதியத்தில் அவர்கள் குடும்பங்களை நடத்த முடியாமல் ஏழ்மை நிலையில் தத்தளிக்கிறார்கள்.

சம்பள உயர்வும் இந்த 20 மாதத்தில் வழங்கவில்லை.

இவர்கள் வாழ்வாதாரம் காக்க திமுக அரசு முன்வர வேண்டும்.

திமுக 181வது தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்று, பணிநிரந்தரம் வேண்டி காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் கனிவான கோரிக்கையை,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில்  வலியுறுத்தி உள்ளார்.

*******

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459