பொங்கல் பண்டிகை : பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

13/01/2023

பொங்கல் பண்டிகை : பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

  

.com/

பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை முதல் நான்கு நாட்களுக்கு பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


தமிழர் திருநாள் என்ற பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது; 16ல் மாட்டுப் பொங்கல் 17ல் காணும் பொங்கல். இதையொட்டி நாளை முதல் வரும் 17ம் தேதி வரை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மீண்டும் 18ம் தேதி பள்ளி கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.


அரசு தரப்பில் வரும் 17ம் தேதி வரை பள்ளி கல்லுாரிகளுக்கும் அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.பல தனியார் பள்ளி , கல்லுாரிகளில் குறிப்பிட்ட சில படிப்புகளை சேர்ந்த மாணவ - மாணவியருக்கு 16, 17ல் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


தமிழர் திருநாளை கருத்தில் வைத்து அனைத்து கல்வி நிறுவனங்களும் பாரபட்சமின்றி ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் நான்கு நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment