பொதுத் தேர்வு எழுத விரும்பும் ஐடிஐ பயின்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

26/12/2022

பொதுத் தேர்வு எழுத விரும்பும் ஐடிஐ பயின்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

 தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் ஐடிஐ பயின்ற மாணவர்கள் இன்று (டிச.26) முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐபடிப்பவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி 8ம் வகுப்புக்கு பிறகு ஐடிஐகளில் சேர்ந்து படிப்பை முடிப்பவர்களுக்கு 10ம் வகுப்புக்கு இணையான கல்விச் சான்றிதழும், 10-ம் வகுப்புக்கு பிறகு ஐடிஐகளில் படிப்பை முடிப்பவர்களுக்கு பிளஸ் 2 வகுப்புக்கான கல்விச் சான்றிதழும் பள்ளிக்கல்வித் துறை மூலம் அளிக்கப்படும்அதேநேரம்ஐடிஐ முடித்தவர்கள் மொழிப் பாடங்களில் தேர்ச்சி அடைய வேண்டும்.

அதன்படி, 10, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச்சில் நடக்க உள்ளதுஎனவே, 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பின்னர் ஐடிஐ படித்தவர்கள் தமிழ்ஆங்கிலப் பாடத் தேர்வில் பங்கேற்க தனித்தேர்வர்களாக இன்று (டிச. 26) முதல் ஜன.3ம் (03.01.2023) தேதிக்குள் அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459