கணினி ஆசிரியருக்கு வேறு பணி பள்ளிகளில் பாடம் பாதிப்பு - ஆசிரியர் மலர்

Latest

21/12/2022

கணினி ஆசிரியருக்கு வேறு பணி பள்ளிகளில் பாடம் பாதிப்பு

அரசு பள்ளி கணினி ஆசிரியர்கள், டி.ஆர்.பி., பணிக்கு மாற்றப்படுவதால், பள்ளிகளில் கணினி பாடம் பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் கணினி அறிவியல் ஆசிரியர்களில், 90 சதவீதம் பேர், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,யின் பணிகளை மேற்கொள்ள, தினசரி அயல் பணி அடிப்படையில் மாற்றப்படுகின்றனர்.

அதனால், இந்த ஆசிரியர்கள், நடப்பு கல்வி ஆண்டின் பெரும்பாலான வேலை நாட்களில் பள்ளிக்குச் செல்லாமல், வாரியத்தில் வேலை பார்க்கின்றனர்.

அந்த ஆசிரியர்கள் பணியாற்றும் அரசு மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கணினி பாடங்கள் நடத்தப்படாமல் உள்ளன.

பொதுத் தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கணினி அறிவியல் பாடம் படிக்காமலும், கணினி இயக்கவும் கூட தெரியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பின், இன்ஜினியரிங் படிக்க சென்றால், அங்கு முதலிடத்தில் உள்ள கணினி அறிவியல் பாடத்தை தேர்வு செய்வது வழக்கம்.

ஆனால், பிளஸ் 2வில் கணினி பாடம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல், இன்ஜினியரிங் படிக்க சென்றால், தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என மாணவர்கள் அஞ்சுகின்றனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459