ஜன. 3 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

26/12/2022

ஜன. 3 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

 

1

கந்தூரி விழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு வருகிற ஜனவரி 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


நாகூா் ஆண்டவா் 466-ஆவது ஆண்டு கந்தூரி விழா இன்று (டிச.24) முதல் ஜன.6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன்தொடக்கமாக இன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, காவல்துறையினர், ஆயுதப்படையினர், ஊர்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுளள்னர். 


இந்நிலையில், கந்தூரி விழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு வருகிற ஜனவரி 3 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். 


விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459