மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?TNEB - Aadhaar Link: யாரெல்லாம் ஆதாரை எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்? - ஆசிரியர் மலர்

Latest

29/11/2022

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?TNEB - Aadhaar Link: யாரெல்லாம் ஆதாரை எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்?

 மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 6ம் தேதி வெளியான நிலையில், தற்போது அதனை செயல்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளில் தமிழக அரசு களமிறங்கியுள்ளது.


மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, மின்கட்டண அலுவலகத்தில் இன்று முதல் சிறப்பு முகாம் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது. ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்று தொடங்கி, டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனைப் பயன்படுத்த பொதுமக்கள் தங்களது மின் அட்டை மற்றும் ஆதார் அட்டையை கொண்டு சென்று, இணைத்து கொள்ளலாம். அரசு விடுமுறைகளை தவிர்த்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பு குறித்து பல்வேறு கேள்விகள் நிலவி வரும் நிலையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,

“ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். நஷ்டத்தில் இயங்கும் மின்வாரியத்தை சீரமைக்கவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது,” என விளக்கம் அளித்தார். 


ஆன்லைன் மூலம் இணைப்பது எப்படி? 


மின் நுகர்வோர் TNEB இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nsc.tnebltd.gov.in/adharupload/ -க்குச் செல்ல வேண்டும். ஆதார் இணைப்புக்கான படிவம் இருக்கும், அதில் உங்கள் TANGEDCO சேவை இணைப்பு எண்ணை பதிவிட்டு ‘ok’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். OTP-யை உள்ளிடுவதன் மூலமாக உங்கள் செல்போன் எண்ணை உறுதிபடுத்த வேண்டும்.
OTP ஐ உள்ளிட்ட பிறகு உங்கள் TANGEDCO கணக்கைச் சரிபார்க்க வேண்டும். அதில் வாடைக்கு குடியிருப்போர், உரிமையாளர் என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். அதில் உங்களுக்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். TANGEDCO கணக்குடன் இணைக்கப்பட வேண்டிய உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும். ஆதாரில் உள்ள பெயரை உள்ளிட வேண்டும்.

உங்கள் ஆதார் ஐடியைப் பதிவேற்றிய பிறகு, 'I agree' என்பதை கிளிக் செய்வதன் மூலமாக மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும். படிவத்தைச் சமர்ப்பித்து பிறகு, ரெசிப்டை டவுன்லோடு செய்து கொள்ளவும்.


யாரெல்லாம் ஆதாரை எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்? 

(i) முதல் 100 யூனிட் மின்சாரத்தை இருமாதம் இலவசமாகப் பெறுபவர்கள் மற்றும் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தும் உள்நாட்டு நுகர்வோருக்கு இருமாதத்திற்கு ஒருமுறை 100 யூனிட்டுகளுக்கு மேல் 200 யூனிட்கள் வரை கட்டணத்தைக் குறைப்பது போன்ற மானியத் திட்டங்களில் பயன் பெறுவோர்.


 (ii) இலவச மின்சார விநியோகத்தைப் பெறும் குடிசை நுகர்வோர்.

 (iii) வேளாண் நீர்பாசனத்திற்காக இலவச மின்சாரம் பெறும் விவசாயிகள். 

(iv) இரு மாதத்திற்கும் 120 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் பெறக்கூடிய அனைத்து பொது வழிபாட்டுத் தலங்கள்.

 (v) இருமாதத்திற்கு ஒருமுறை முதல் 750 யூனிட்கள் இலவசம் மற்றும் 750 யூனிட்டுகளுக்கு டெட் ஃபண்டிற்கான கட்டணக் குறைப்பு பெறும் விசைத்தறி நுகர்வோர்.

 (vi) முதல் 200 யூனிட்களை இருமாதம் இலவசமாகப் பெறும் கைத்தறி நுகர்வோர். ஆதாரை இணைக்க காலக்கெடு இல்லை; ஆனால் மானியம் பெறுபவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் மின்கட்டணத்தை தொடர்ந்து செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459