வெளுத்து வாங்கிய கனமழை - உதவி எண்கள் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

01/11/2022

வெளுத்து வாங்கிய கனமழை - உதவி எண்கள் அறிவிப்பு

 

சென்னையில் இரவு முழுவதும் நீடித்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்தித்தனர். சென்னை, சென்னையில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. அதைபோல சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தாம்பரம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்தது. சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கும் மேல் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி எண்கள்:- 1913, 044-25619206, 044-25619207, 044-25619208 இந்த எண்களில் புகார் அளிக்கலாம். மேலும் மாநகராட்சியின் \"நம்ம சென்னை செயலி\" அல்லது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் வழியாகவும் பொதுமக்கள் தொடர்புக் கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459