BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

29/11/2022

BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு

BEL நிறுவனத்தில் Trainee Engineer & Project Engineer பணிகளுக்கு 34 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.12.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BEL 

பணியின் பெயர்: Trainee Engineer & Project Engineer 

மொத்த பணியிடங்கள்: 34

தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B. Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதியம்: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trainee Engineer:

  • முதலாம் ஆண்டு – ரூ.30,000/-
  • இரண்டாம் ஆண்டு – ரூ.35,000/-
  • மூன்றாம் ஆண்டு – ரூ.40,000/-

Project Engineer:
  • முதலாம் ஆண்டு – ரூ.40,000/-
  • இரண்டாம் ஆண்டு – ரூ.45,000/-
  • மூன்றாம் ஆண்டு – ரூ.50,000/-
  • நான்காம் ஆண்டு – ரூ.55,000/-
முன் அனுபவம்: Trainee Engineer-I பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1 ஆண்டு கால post qualification industrial experience மற்றும் Project Engineer – I பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 2 ஆண்டு கால post qualification industrial experience கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Trainee Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

  • Project Engineer- General, EWS and OBC – ரூ.472/-
  • Trainee Engineer-I – General, EWS and OBC – ரூ.177/-
  • SC/ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2022

Notification for BEL 2022: Download Here

Application Form: Download Here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459