மத்திய துணை ராணுவப் படைகளில் வேலைவாய்ப்பு காலிபணியிடங்கள் 24,369 விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.22 - ஆசிரியர் மலர்

Latest

17/11/2022

மத்திய துணை ராணுவப் படைகளில் வேலைவாய்ப்பு காலிபணியிடங்கள் 24,369 விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.22

  10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ் நவம்பர் 30 தேதிக்குள் www.ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

605649-829ddf90e0affd902cfd159ac4756c4d

மத்திய துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள 24,369 கான்ஸ்டபிள் பணி இடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: கான்ஸ்டபிள் (CAPFS)


காலி பணியிடங்கள்: 24,369


சம்பளம்: மாதம் ரூ.21,700 - ரூ.69,100


தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிசி பயிற்சி பெற்றிருப்பது கூடுதல் தகுதியாகும். குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் தூரத்தை 24 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.


உடற்தகுதி: ஆண்கள் குறந்தபட்சம் உயரம் 170 செ.மீட்டரும், மார்பளவு 80 செ.மீட்டரும், 5 செ.மீட்டர் விரிவடையும் தன்னை பெற்றிருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீட்டர் உயரம் பெற்றிருக்க வேண்டும். 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 8.5 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.


தேர்வு செய்ப்படும் முறை: எஸ்எஸ்சி ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


முதல்கட்ட எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, சேலம், திருச்சி, வேலூர், திருநெல்வேலி.

எழுத்துத் தேர்வு: ஜனவரி 2023 இல் நடைபெறும்.


விண்ணப்பக் கட்டணம்

ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி பிரிவினர், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறைwww.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2022

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459