DTEd - ஆசிரியர் பயிற்சித் தேர்வு விடைத்தாள் நகல் இணையத்தில் பெறலாம் - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

26/10/2022

DTEd - ஆசிரியர் பயிற்சித் தேர்வு விடைத்தாள் நகல் இணையத்தில் பெறலாம்

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களின் விடைத்தாள் நகலை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் படித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள் இன்று மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பிறகு மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணை தள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டு கட்டணத் தொகையை கீழ்க் குறிப்பிட்டுள்ள நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை 27ம் தேதி மற்றும் 28ம் தேதிகளில் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459