2,748 கிராம உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவக்கம்! - ஆசிரியர் மலர்

Latest

 




04/10/2022

2,748 கிராம உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவக்கம்!

 தமிழகம் முழுதும் 2,748 கிராம உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளன.ஊராட்சிகளில் உள்ள கிராம உதவியாளர்கள் வாயிலாக, அரசின் பல்வேறு திட்டங்கள், தகுதியுடைய பயனாளிகளை சென்றடைகிறது.


ஆனால், மாநிலம் முழுதும் 2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.தற்போது, இப்பணியிடங்களை நிரப்புவதற்கான முன்னேற்பாடு துவங்கி உள்ளது.இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக கமிஷனர் பிரபாகர் எழுதியுள்ள கடிதம்:கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை, வரும் 10ம் தேதி, தாலுகா அளவில் வெளியிட வேண்டும்.


விண்ணப்பங்களை நவ., 7 வரை பெற வேண்டும்.விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகளை, 14ம் தேதியும்; எழுத்து தேர்வை, 30ம் தேதியும் நடத்த வேண்டும். நேர்முக தேர்வை டிச., 15, 16ல் நடத்த வேண்டும்.தேர்வு செய்யப்பட்ட கிராம உதவியாளர்கள் பட்டியலை, 19ம் தேதி வெளியிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459