ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி - ஆசிரியர் மலர்

Latest

13/09/2022

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி

 


பழைய ஓய்வூதிய திட்டம், பணி நிரந்தரம் என தாங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த எந்த அறிவிப்பும் வெளியாகாததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதல்வர் ஸ்டாலின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனராம்.


அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியம் (CPS) ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) கொண்டு வரப்படும் என்று 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது.


இதேபோன்று திமுக ஆட்சிக்கு வந்தால், அரசுப் பள்ளகளில் பணியாற்றிவரும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.


பழைய ஓய்வூதிய திட்டம், பணி நிரந்தரம் ஆகிய தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை முந்தைய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி நிறைவேற்றாததால் ஏமாற்றத்தில் இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு அகம் மகிழ்ந்திருந்தனர். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று ஆவஸோடு எதிர்பார்த்திருந்தனர்.


அவர்கள் எதிர்பார்த்தபடியே தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வரானார். உடனே இதுதான் தக்க தருணம் என்று கருதிய அரசு ஊழியர்கள், தேர்தலின்போது சொன்னப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை எப்போது அமல்படுத்திவீங்க என்று திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.


இந்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆறு மாதங்களுக்கு முன் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஓப்பனாக அறிவித்ததையடுத்து நம்பிக்கை இழந்த அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி, வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டை நடத்த முடிவு செய்தனர். அரசு ஊழியர்களுடன் துணை்க்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களும் சேர்ந்து கொள்ள, அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ சார்பில், இந்த மாநாடு சென்னை தீவுத்திடலில் அண்மையில் நடத்தப்பட்டது.


மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைக்கப்பட்டிருநததால், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அவர் அறிவிப்பார் என்று அரசு ஊழியர்களும், பணி நிரந்தரம் பற்றி முதல்வர் நிச்சயம் அறிவிப்பார் என பகுதி நேர ஆசிரியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.


ஆனால், 'பகுதி நேர ஆசிரியர்களும் 60 வயது பணியாற்றலாம் என்று மாநாட்டில் அறிவித்த முதல்வர், அரசின் நிதி நிலைமை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என்று மட்டும் தெரிவித்தார்.


அதாவது, பழைய ஓய்வூதிய திட்டம் இப்போதைக்கு அமல்படுத்தப்படாது என்று ஸ்டாலின் மறைமுகமாக சொன்னதை கேட்டதும் மாநாடு அரங்கில் இருந்து ஏமாற்றத்துடன் கலைய தொடங்கிய அரசு ஊழியர்கள், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆக உள்ள நிலையிலும், தங்களது வாழ்வாதார கோரிக்கை நிறைவேற்றப்படாததால் முதல்வர் ஸ்டாலின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனராம்.

எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் திமுகவுக்கு வாக்கு அளிப்பதுதான் வழக்கம். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் திமுகவுக்கு பதிவாகும் தபால் ஓட்டுகளே இதற்கு சாட்சி. ஆனால், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டு, கருணாநிதி காலத்திலும் தொடரப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, மீ்ண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தலின்போது போகிறபோக்கில் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போதுவரை முதல்வர் ஸ்டாலின் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், அரசு ஊழியர்களின் வாக்கு வங்கியை திமுக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கின்றன அரசு ஊழியரகள் சங்க வட்டாரங்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459