மழை வேற வருது.. புள்ளைங்க பாவம்ல! 800 மாணவர்களுக்கு குடை கொடுத்த தலைமை ஆசிரியர்! சூப்பர் சார்! - ஆசிரியர் மலர்

Latest

10/09/2022

மழை வேற வருது.. புள்ளைங்க பாவம்ல! 800 மாணவர்களுக்கு குடை கொடுத்த தலைமை ஆசிரியர்! சூப்பர் சார்!

 கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, மழைக்காலங்களில் பள்ளிக்கு தவறாமல் வரும் வகையில், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 803 பேருக்கு, தனது சொந்த செலவில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் குடை வழங்கி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.கல்வித்துறையில் அர்ப்பணிப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களால் முடிந்த வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம்.ஒருசில ஆசிரியர்கள், மாணவர்களை எப்போதும் உற்சாகமாக வைப்பதற்காக, வித்தியாசமான முறையில் நகைச்சுவையுடன் பாடம் கற்பித்து மாணவ, மாணவிகளின் அன்பை பெறுவது உண்டு. இதற்கு உதராணமாக, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, மழைக்காலங்களிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சிரமமின்றி தவறாமல் வரும் வகையில், தனது சொந்த செலவில் குடை வழங்கியிருக்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியார்.

பள்ளி தலைமை ஆசிரியர்

சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் மணிவாசகன். தான் பணியாற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார் மணிவாசகன். கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் மழைக்காலங்களில் மாணவர்கள் நனையாமலும், தவறாமல் பள்ளிக்கு வருவதற்காகவும் இலவசமாக குடைகளை வழங்கியுள்ளார்.மாணவர்களுக்கு சிற்றுண்டிஇதேபோல் சேவையாற்றி வரும் தலைமை ஆசிரியர் மணிவாசகன், கடந்த 3 வருடங்களாக இப்பள்ளியில் படித்து அரசுப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மாலை நேரத்தில் இரவு வகுப்புகளை நடத்தியுள்ளார். மேலும், தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கி உபசரித்துள்ளார். பாடம் முடிந்தவுடன், பாதுகாப்பாக வேனில் மாணாக்கர்களை அவரவர் வீடுகளுக்கு பத்திரமாக அனுப்பியும் வைத்துள்ளார்.மீண்டும் இலவச குடைதமிழகத்தில் தற்போது மழை காலம் என்பதால், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு தவறாமல் வரும் வகையிலுல், அனைவருக்கும் குடை வழங்க தலைமை ஆசிரியர் முடிவு செய்தார். அதன்படி, இலவச குடை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வாளகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிவாசகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அவரின் தாயார் சேதுமணி பங்கேற்று, தனது கணவரின் நினைவாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக குடைகளை வழங்கினார்.

803 மாணாக்கர்களுக்கு குடைகள்

இந்த அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 803 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தரமான குடைகள் வழங்கப்பட்டது. குடைகளை பெற்றுக்கொண்ட மாணவ, மாணவிகள், தலைமை ஆசிரியருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459