அக்.2-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க ஆணை : பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

19/09/2022

அக்.2-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க ஆணை : பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

.com/

அக்.2-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும், பள்ளி வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பள்ளி கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் கல்வி குழு என்பது ஒரு அங்கமாக உள்ளது. இந்த கல்வி குழுவில் பள்ளி வளர்ச்சி சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதேபோல், பள்ளி மேலாண்மை குழுக்களும் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதில் புதிய உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதன் அடிப்படையில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கின்றன.


அந்த கூட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து பங்கேற்க வேண்டும். அந்த கூட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான ஆலோசனை, தற்போது கற்றல் பணிகள் தொடர்பான ஆலோசனை, கல்வி நிலைக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக மற்றும் பள்ளி வளர்ச்சிக்கு தொடர்பான ஆலோசனையை கிராம சபை கூட்டங்களில் முன்வைத்து உரிய ஆலோசனையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பள்ளி கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் அந்தந்த பகுதிகளில் இருக்க கூடிய பள்ளிகளில் அந்த பள்ளியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கிறன என்பதை கிராம சபை கூட்டங்களில் முன்வைத்து அதற்கான பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.     

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459