ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்களா நீங்கள்? அப்ப ரூ.10,000 கிடைக்கும்.. எப்படி? - ஆசிரியர் மலர்

Latest

01/09/2022

ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்களா நீங்கள்? அப்ப ரூ.10,000 கிடைக்கும்.. எப்படி?

rupees1.jpg?w=360&dpr=3பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 வரை எடுக்கலாம், எப்படி என்பது இங்கே செய்தியில் பார்ப்போம்.


நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, 2014 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி  தனது சுதந்திர நாள் உரையில் ஜன் தன் ஜோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தார். 


மேலும், ஏழை எளிய மக்கள் பணம் அனுப்புதல், கடன், காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்ற நிதிச் சேவைகளுக்கு தனிநபர்கள் வங்கிச் சேவைக்குள் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆகஸ்ட் 28  தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


சலுகைகள்: ஜன் தன் யோஜனா திட்டத்தில் நிறைய வசதிகளும் சலுகைகளும் உள்ளன. அதில் முக்கியமான ஒரு வசதிதான் ஓவர் டிராஃப்ட். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் உங்களுடைய ஜன் தன் யோஜனா கணக்குகளை வைத்திருப்பவர்கள் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் (ஜீரோ பேலன்ஸ்) கூட நீங்கள் ரூ.10,000 வரை எடுக்க முடியும். கணக்கில் பணம் இருந்தாலும் இதை நீங்கள் எடுக்கலாம்.


இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் ஓவர் டிராஃப்ட் முறையில் ரூ.5000 மட்டுமே எடுக்க முடியும்.


இதன் பின்னர் அது இரட்டிப்பாக்கப்பட்டு தற்போது ரூ.10,000 வரை எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. ரூ.2000 வரை மட்டுமே நிபந்தனை இல்லாமல் எடுக்க முடியும். ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்த குறைந்தது 6 மாதங்கள் ஜன் தன் கணக்கை பயன்படுத்தியிருக்க வேண்டும்.


அப்போதுதான் ரூ.10,000 எடுக்க முடியும். இல்லாவிட்டால் ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும். ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறுவதற்கான வயது வரம்பு 60ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


ஜன் தன் யோஜனா கணக்குகள் நேரடி பலன் பரிமாற்றம், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா, மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் மற்றும் ரிஃபைனான்ஸ் ஏஜென்சி வங்கி திட்டத்திற்குத் தகுதியுடையவை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459