ஆளைப் பார்த்தே எந்த சாதி என்று சொல்லிவிடுவேன் ...பேராசிரியையின் சர்ச்சை பேச்சு - ஆசிரியர் மலர்

Latest

20/08/2022

ஆளைப் பார்த்தே எந்த சாதி என்று சொல்லிவிடுவேன் ...பேராசிரியையின் சர்ச்சை பேச்சு


சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் துறை தலைவர் பேராசிரியர் அனுராதா என்பவர் தன்னிடம் படிக்கும் மாணவனிடம் செல்போனில் பேசும் சர்ச்சை ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் குறித்தும், அந்த மாணவர்களுடைய சாதி என்ன என்று குறித்தும் கேட்கிறார். மேலும் சில மாணவர்களுடைய பெயரை சொல்லி அந்த மாணவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவனா.? நீ எந்த சமூகத்தை சேர்ந்தவன் உன்னுடைய முகத்தை பார்த்தாலே தெரிகிறது எந்த சாதினு என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். மாணவர்களின் முகத்தைப் பார்த்தாலே பி.சி-யா.? எம்.பி.சி-யா.? என தெரிந்துவிடும் என்று கூறியுள்ளார். கல்லூரி பேராசிரியர் ஒருவர் இப்படி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பச்சையப்பன் கல்லூரி ஆசிரியர் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் அனுராதா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459