க்யூட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - ஆசிரியர் மலர்

Latest

15/08/2022

க்யூட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு

 புதுடில்லி-மத்திய பல்கலைகளில் சேருவதற்கான, ‘க்யூட்’ நுழைவுத் தேர்வின் நான்காவது கட்டத்தில், தங்களுடைய தேர்வு மையத்தை மாற்றுவதற்காக, 11 ஆயிரம் மாணவர்களுக்கான தேர்வு, வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக க்யூட் நுழைவுத் தேர்வு இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், பல தனியார் பல்கலைகளும், மாநில பல்கலைகளும் இணைந்து உள்ளன.இந்தத் தேர்வுகளை, ஆக. 20ம் தேதிக்குள் முடிக்க, தேர்வுகளை நடத்தும் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை திட்டமிட்டிருந்தது. ஆனால், சில தொழில்நுட்பக் காரணங்களால் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், நான்காம் கட்டத் தேர்வு, ஆக., 17 – 20ம் தேதி வரை நடக்கிறது. இதில், 3.72 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். கடந்த இரண்டு மற்றும் மூன்றாம் கட்டத் தேர்வின்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நான்காம் கட்டத் தேர்வு எழுதும் மாணவர்கள், வேறு இடங்களை தேர்வு செய்வதற்கு அனுமதி கேட்டனர். அதன்படி, இந்த இடங்களைச் சேர்ந்த, 11 ஆயிரம் மாணவர்கள், வேறு தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்க வசதியாக, அவர்களுக்கான தேர்வு மட்டும், வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459