குட் நியூஸ்.. அரசு பணிகள் தேர்வில் ஆச்சரியம்! ஒன்றாக படித்து பாஸ் - தாய், மகன் காட்டிய மாஸ் - ஆசிரியர் மலர்

Latest

10/08/2022

குட் நியூஸ்.. அரசு பணிகள் தேர்வில் ஆச்சரியம்! ஒன்றாக படித்து பாஸ் - தாய், மகன் காட்டிய மாஸ்

 


கேரளாவில் தாயும் மகனும் ஒரே பயிற்சி மையத்தில் ஒன்றாக படித்து அரசுப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளது பலரும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் பிந்து (42). இவரது மகன் விவேக் (24). விவேக் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது அவருக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்காகவும் ஊக்கப்படுத்துவதற்காகவும் இவரும் சேர்ந்து பாடப்புத்தகங்களை படித்து இருக்கிறார்.மகனின் பாடப்புத்தகங்களை தொடர்ந்து படித்து பல விசயங்களை தெரிந்துகொண்ட இவருக்கு, நாம் ஏன் அரசுப் பணிகள் தேர்வுக்கு தயாராகக் கூடாது? என்ற எண்ணம் எழுந்து இருக்கிறது. அன்றிலிருந்து 9 ஆண்டுகளாக பிந்து அரசுத் தேர்வுகளுக்கு தயாராகி வந்து இருக்கிறார். சரித்திரம்...பீகார் மாநிலத்தின் முதல்வராக 8-வது முறையாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ்குமார்!தாய் மகன்பிந்துவின் மகன் விவேக்கும் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு தாயுடன் சேர்ந்து அரசுத் தேர்வுகளுக்காக படித்து வந்துள்ளார். இதற்காக இருவரும் சேர்ந்து பயிற்சி வகுப்புகளுக்கும் சென்று இருக்கிறார்கள். தாய் பிந்து, வயதை பொருட்படுத்தாமல் இதற்கு தயாராகி வருவது விவேக்கிற்கும் ஊக்கத்தை கொடுத்து இருக்கிறது.


ஒன்றாக தேர்ச்சி


இதுவரை 3 முறை அரசுத் தேர்வுகளை எழுதி தோல்வியடைந்த பிந்து, 4 வது முறையாக தனது மகனுடன் தேர்வு எழுதி வெற்றி பெற்று பலரை புருவம் உயர்த்த வைத்து இருக்கிறார். அரசு கீழ் பிரிவு எழுத்தர் தேர்வில் பிந்து 38 வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். மகன் விவேக், கடைநிலை ஊழியர்கள் தேர்வில் 92 வது இடத்தை பிடித்து வெற்றியடைந்து இருக்கிறார்.


பிந்து பேட்டி


இதுகுறித்து பிந்து கூறுகையில், "அங்கன்வாடி மையத்தில் 10 ஆண்டுகள் பாடம் எடுத்து இருக்கிறேன். என்னுடைய மகன், நண்பர்கள், பயிற்சியாளர்கள் எனக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வந்ததனர். ஒரு அரசுப் பணிகள் தேர்வு எழுதுபவர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக்கூடாது? என்பதற்கு நான் தான் உதாரணம்.


தோல்விகள் ஏன்?


தேர்வுக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் படிக்கத் தொடங்குவேன். தேர்வுக்கு பிறகு அடுத்தக்கட்ட தேர்வு அறிவிக்கப்படும் வரை படிக்க மாட்டேன். இதன் காரணமாகவே 3 முறை தோல்வியடைந்தேன். கேரளாவில் 40 ஆண்டுகள் வரை மட்டுமே அரசுப் பணியில் சேர முடியும். ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகளும் கூடுதல் அவகாசம் உள்ளது.விவேக் பேட்டிஇதுகுறித்து விவேக் கூறுகையில், "என் தந்தை எங்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவினார். அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்தார். ஆசிரியர்கள் எங்களுக்கு ஊக்கமளித்தார்கள். நாங்கள் ஒன்றாகவே படித்தோம். ஆனால், ஒன்றாக தேர்ச்சி அடைவோம் என்று எதிர்பார்த்ததே கிடையாது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்." என்றார்.: (ஒன்றாக படித்து பாஸ் ஆன தாய், மகன்) கேரளாவில் தாயும் மகனும் ஒரே பயிற்சி மையத்தில் ஒன்றாக படித்து அரசுப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளது பலரும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459