6 மாத அகவிலைப்படி ஏமாற்றம்: ஆசிரியர் சங்கம் கண்டனம் - ஆசிரியர் மலர்

Latest

16/08/2022

6 மாத அகவிலைப்படி ஏமாற்றம்: ஆசிரியர் சங்கம் கண்டனம்

 அரசு ஊழியர், ஆசிரியர்களின் 6 மாத அகவிலைப்படியை பறிக்கும் விதத்தில் சுதந்திர தின விழாவில் அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர், அரசை கண்டிப்பதாக தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விலைவாசி உயர்வின் அடிப்படையில் ஊழியர்களுக்கு வழங்கும் வழக்கமான அகவிலைப்படி உயர்வை காலத்தோடு வழங்கவில்லை. பீகார் உள்ளிட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏழை மாநிலங்களில் கூட உரிய காலத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.


75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்நாளில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் 2022 ஜன.,1ம் தேதியிட்டு வழங்கவேண்டிய அகவிலைப்படி உயர்வை 6 மாதம் தாமதமாக அறிவித்தது மட்டுமின்றி 6 மாத நிலுவையையும் பறித்து அரசு ஊழியர், ஆசிரியர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிவிட்டது


அரசு.தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி பழைய பென்ஷன் திட்டம், ஈட்டிய விடுப்புக்கான சரண்டர் தொகையை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459