கை அசைவில் இலக்கியம்: நான்கு வயது சிறுவனின் அசத்தல் முயற்சி - ஆசிரியர் மலர்

Latest

02/07/2022

கை அசைவில் இலக்கியம்: நான்கு வயது சிறுவனின் அசத்தல் முயற்சி


கை அசைவை பார்த்து எளிதாக தமிழ் இலக்கியம் கற்று வரும் 4 வயது சிறுவனின் முயற்சி பள்ளி மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை சுகன்யா. இவரது 4 வயது மகன் தேஜஸ்வினுக்கு சிறு வயது முதல் தமிழ் இலக்கிய வார்த்தைகளை செய்கை மூலம் கற்றுக் கொடுத்து வருகிறார். ஒவ்வொரு கை அசைவிற்கும் ஒவ்வொரு விதமான தமிழ் இலக்கண வார்த்தைகளை அடையாளம் வைத்து கற்றுக் கொடுத்துள்ள நிலையில், அதனை தொடர்ச்சியாக சொல்லி அசத்தும் சிறுவனின் முயற்சி பாராட்டை பெற்றுள்ளது. image கை அசைவின் மூலம் இலக்கண வார்த்தைகள் மட்டுமல்லாமல் 100 வகையான தமிழ் பூக்கள், மற்றும் தமிழக்கத்தின் பாரம்பரிய 25 வகையான அரிசி வகைகளையும் கூறி அசத்துகிறார், மேலும் இந்தியாவின் மாநிலங்களை சஷ்டி ராகத்தில் பாடியுள்ளார் சிறுவன் தேஜஸ்வின் இதுபோன்ற கையசைவு கற்பித்தல் முறையை செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் மாற்ற உள்ளதாகவும் இதுபோன்ற கை அசைவில் கற்று கொடுப்பதால் சிறுவர்கள் எளிமையான முறையில் தமிழ் இலக்கண வார்த்தைகளை கற்றுக் கொள்ள முடியும் என ஆசிரியை சுகன்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459