தொடக்கக்கல்வி கலந்தாய்வு - இந்த நிலை எப்போது மாறும்? - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

01/07/2022

தொடக்கக்கல்வி கலந்தாய்வு - இந்த நிலை எப்போது மாறும்?

தமிழக அரசு தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்காக மாவட்ட வாரியாக ஆசிரியர் காலியிட பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் இடைநிலை ஆசிரியர் காலியாக உள்ளது என 4989 பணியிடங்களை கூறி உள்ளது. 

2022 பிப்ரவரி மாதம் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் காலிப்பணியிடங்கள் என கூறும் கல்வித்துறை ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும் போது மட்டும் Need Post என்று கூறி நூற்றுக்கணக்கான பணியிடங்களை கலந்தாய்வில் காட்டாமல் மறைத்து விடுகிறது. 

அந்த காலியிடங்களை கலந்தாய்வில் காட்டினால் சொந்த ஊர் இல்லை என்றாலும் அருகில் இருக்கும் மாவட்டத்தில் கூட ஆணை பெற்று ஆசிரியர் இனம் வேலை பார்க்க உதவியாக இருக்கும்.

நிர்வாக மாறுதல் என்று முறைகேடாக மாறுதல் ஆணை வழங்க இவ்வாறு செய்யப்படுகிறதோ? என்ற சந்தேகம் ஒவ்வொரு ஆண்டும் எழுகிறது. 

நிர்வாக மாறுதல் கிடையாது என்ற பள்ளிக்கல்வி ஆணையரின் உத்தரவு ஆறுதல் அளித்தாலும் இந்த குறையை சரிசெய்து வரும் கலந்தாய்வில் அனைத்து பணியிடங்களை கலந்தாய்வில் காட்டி உதவ வேண்டும் என தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

No comments:

Post a Comment