என்னடி தங்கபுள்ள கொண்டு வந்துருக்க! வெட்கத்தோடு ’கிப்ட்’ கொடுத்த மாணவி! தேவதை டீச்சரின் ரியாக்சன்! - ஆசிரியர் மலர்

Latest

02/07/2022

என்னடி தங்கபுள்ள கொண்டு வந்துருக்க! வெட்கத்தோடு ’கிப்ட்’ கொடுத்த மாணவி! தேவதை டீச்சரின் ரியாக்சன்!


திண்டுக்கல் : பள்ளியில் பாடம் சொல்லித் தரும் தனக்கு பிடித்த டீச்சருக்கு வீட்டிலிருந்து தானே தயாரித்த ரசத்தை வெட்கத்தோடு கொடுக்கும் பள்ளி மாணவியும் அதனை ஆசையாய் வாங்கி குடித்து தங்கபுள்ள என பாராட்டும் ஆசிரியையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்.. அதாவது நம்மைச் சுற்றி இருக்கும் குழந்தைகளின் குரலை விட புல்லாங்குழலின் இசையும் யாழினி இசையும் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதை இதன் அர்த்தம்..அந்த அளவுக்கு பச்சிளம் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவினையும் பேச்சினையும் கேட்டு ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதேபோல பள்ளிக்காலங்களை நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியயைகளையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. விரல் பிடித்து அ சொல்லிக் கொடுத்த அவர்களது தொடக்கம் தான் இன்று நமது வாழ்வில் ஒரு அங்கம் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.

.பள்ளி ஆசிரியை


அப்படி ஒரு பிஞ்சுக் குழந்தையும் ஒரு ஆசிரியை இடையிலான உரையாடல் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கிறது வேறு எங்கும் அல்ல திண்டுக்கல்லில் தான்.. குறிப்பாக தன்னிடம் படிக்கும் மாணவர்களின் மனதில் விவசாய ஆசையை விதைத்து வருகிறார் பள்ளி ஆசிரியை ஒருவர். அவர் வகுப்பு மாணவர்கள் விவசாய மீதும் பற்றுடன் இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தைப் பருவத்திலேயே பயிற்சி அளிக்கிறார் அவர் தான் வடமதுரை கலைமகள் துவக்கப் பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி.கற்றலின் இனிமைதான் பயிற்றுவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு விவசாயம் இத்தாலிய கணித முறை ஜப்பானிய கணித முறை என பல்வேறு கணித முறையை கற்று வருவதோடு நம் மண் மற்றும் மண் சார்ந்த விஷயங்களையும் கற்று தருகிறார். காலையிலிருந்து மாலை வரை பாடத்திட்டங்களை கற்றுத் தந்தாலும் வாழ்விற்கு வளம் அளிக்கும் திட்ட பாடங்களையும் கற்று தருகிறார்புவனேஸ்வரி.


மாணவர்கள் ஆர்வம்


மண்ணின் விவசாயம் சார்ந்த விஷயங்களை கற்றுத் தருவதோடு மர வளர்ப்பிற்கு உதவும் விதைப்பந்து தயாரித்தல் மண் இல்லா தீவன வளர்ப்பு ஹைட்ரோபோனிக்ஸ் முறை விவசாயம் என பல்வேறு விவசாயம் சார்ந்த விஷயங்களை விளக்கி தயாரிப்பு பயிற்சியும் வழங்குகிறார். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற பழமொழிக்கேற்ப தம்மிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வரும் புவனேஸ்வரி உலகிற்கே உணவு வழங்குவது விவசாயம் அதனால் வாரத்தில் ஒரு நாள் சிறிது நேரம் விவசாயம் சார்ந்த விஷயங்களுக்கு ஒதுக்கி மாணவர்களுக்காக கற்பித்து வருகிறார்.


புவனா டீச்சர்


மேலும் ஒவ்வொரு நாளும் புவனா டீச்சர் தன் வீட்டிலிருந்து இனிப்பு பதார்த்தங்களை கொண்டு வந்து மாணவிகளுக்கு கொடுப்பது வழக்கம். அதேபோல மாணவிகளும் தங்கள் வீட்டில் செய்த பொருட்களைக் கொண்டு வந்து ஆசிரியைக்கு அன்புடன் கொடுப்பது வழக்கம். அவ்வாறு ஒரு மாணவி ஆசிரியை புவனாவிற்கு ஆசையோடு தான் தயாரித்த ரசத்தை கொண்டு வந்து கொடுக்கிறார். அதனை வாங்கி ஆசிரியை ரசமாக இருந்தாலும் அன்போடு குடித்துவிட்டு வேற லெவலில் இருக்கு தங்க பிள்ளை என பாராட்ட வெட்கத்தில் மகிழ்ச்சியுடன் சிரிக்கிறார் அந்த பிஞ்சு குழந்தை. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஆசிரியைக்கும் மாணவிக்கும் பாராட்டுகளை மழையாக பொழிந்து வருகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459