இல்லம் தேடிக் கல்வி திட்டம்! 2 லட்சமாவது மையத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! - ஆசிரியர் மலர்

Latest

08/07/2022

இல்லம் தேடிக் கல்வி திட்டம்! 2 லட்சமாவது மையத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

 


திருவண்ணாமலை: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் தொடக்க விழா இன்று நண்பகல் நடைபெறவுள்ளது.இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே 2 லட்சமாவது மையம் தொடங்கப்படுவது கவனிக்கத்தக்கது. 


இல்லம் தேடிக் கல்வி


கொரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவை வழங்கப்பட்டது.


தன்னார்வலர்கள்


இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக இதுவரை 7.26 லட்சம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களில் இரண்டு லட்சம் தன்னார்வலர்கள் கற்பிக்கும் சேவையை வழங்கி வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 34 லட்சம் மாணவர்கள் பாடம் கற்று வருகின்றனர். ஆரம்பத்தில் சுமாராக இருந்த இந்த திட்டம் இப்போது மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.முதல்வர் ஸ்டாலின்இதற்கு காரணம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இடைவிடாத தொடர் நடவடிக்கைகள் ஆகும். இதனிடையே இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் 2 லட்சமாவது மையம் திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் இன்று தொடங்கப்படுகிறது. இந்த விழாவில் நண்பகல் 12 மணியளவில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் அந்த மையத்தை தொடங்கி வைக்கிறார்.


காணொலி வெளியீடு


மேலும், இல்லம் தேடிக் கல்வி தொடர்பாக காணொலி ஒன்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுகிறார். அதைத் தொடர்ந்து தொடர் வாசிப்பு இறுதிப்போட்டியில் வெற்றியாளர்களுக்கு கோப்பைகள் வழங்கி புகைப்பட புத்தகத்தையும் முதல்வர் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, கீழ் பென்னாத்தூர் சோமாசிபாடி கிராமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உள்ளடக்கிய இல்லப் பராமரிப்பு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459