கப்பல் துறையில் வேலை வாய்ப்பு மாத சம்பளம் ரூ.50,000 முதல் ரூ.1.60 லட்சம்! - ஆசிரியர் மலர்

Latest

15/07/2022

கப்பல் துறையில் வேலை வாய்ப்பு மாத சம்பளம் ரூ.50,000 முதல் ரூ.1.60 லட்சம்!


டெல்லி: இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் ஏராளமான பணியிடங்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம் வரையிலான மாத சம்பளத்தில் நிரப்பப்பட உள்ளது. டிகிரி, என்ஜினீயரிங், சட்டம் படித்தவர்கள் என அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த கழகத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கி விபரங்கள் பின்வருமாறு:

 காலிப்பணியிடங்கள் எவ்வளவு?

 இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி மேனஜ்மென்ட்டில் 17, பைனான்சில் 10, எச்ஆரில் 10, சட்டப்பிரிவில் 5, தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பில் 2 பேர், சிவில் என்ஜினீயரிங் மற்றும் சிஎஸ் பிரிவில் தலா ஒருவர் என மொத்தம் 46 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

 கல்வித்தகுதி என்ன?

 Assistant Manager- Management பிரிவில் பணிசெய்ய விரும்புவோர் எம்பிஏ அல்லது பிசினஸ் தொடர்பான படிப்பில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். Assistant Manager - Finance பிரிவில் பணிசெய்ய விரும்புவோர் CA அல்லது Cost Accountant முடித்திருக்க வேண்டும். Assistant Manager - HR பணிக்கு முதுகலை பட்டம், அல்லது டிப்ளமோ பிரிவில் பர்சனல் மேனேஜ்மென்ட் , லேபர் வெல்பேர், இன்டஸ்ட்ரீயல் ரிலேசன்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். 

Assistant Manager - Law பிரிவினருக்கு முழுநேரம் என்ற அடிப்படையில் சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். Assistant Manager - Fire And Security பணிக்கு பிஇ/பிடெக் படிப்பில் Fire And Safety Engineering படிப்பை முடி்திருக்க வேண்டும். Assistant Manager - Civil Engineer பணிக்கு பிஇ சிவில் என்ஜினீயரிங் படிப்பையும், Assistant Manager - CS படிப்புக்கு தகுதிவாய்ந்த நிறுவனச் செயலர், இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனத்தில் (ICSI) அசோசியேட் / சக உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். வயது வரம்பு என்ன? இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது, பிடபிள்யூடி பிரிவினருக்கு 10 வயது வரை சலுகை உண்டு. முன்னாள் ராணுவவீரர்களுக்கு அரசு விதிகளின் படி தளர்வு உண்டு. வயதானது 01.05.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். 

 மாத ஊதியம் எவ்வளவு?

 இது ஒப்பந்த அடிப்படையிலான பணி என்பதால் மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.60 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறைந்தப்பட்சம் 3 ஆண்டுகள் வரை ஒருவர் பணி செய்ய முடியும். 



விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று www.shipindia.com ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி கடைசிநாளாகும். ஓபிசி மற்றும் இடபிள்யூஎஸ் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, ExSM ஆகியோருக்கு கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விபரங்கள் அறியவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459