10,371 ஆசிரியர் , பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். - ஆசிரியர் மலர்

Latest

06/07/2022

10,371 ஆசிரியர் , பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி , பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பாலிடெக்னிக், விரிவுரையாளர்கள் என 10,371 காலி பணியிடங்களை நடப்பு ஆண்டில் நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.


அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வானது ஆகஸ்ட் கடைசி வாரத்தில் நடைபெறும்.

2407 முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வானது நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

155 SCERT விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பானது ஜூலை - 2022 மாதத்தில் வெளியிடப்படும். தேர்வு அக்டோபர் 2022 நடைபெறும்.

1874 பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பானது செப்டம்பர் - 2022 மாதத்தில் வெளியிடப்படும். தேர்வு டிசம்பர் 2022 நடைபெறும்.

3987 இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பானது செப்டம்பர் - 2022 மாதத்தில் வெளியிடப்படும். தேர்வு டிசம்பர் 2022 நடைபெறும்.

1358 கல்லூரி உதவி பேராசிரியர்கள், 493 பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் மற்றும் 97 பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பாணையானது அடுத்தடுத்து வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459