NMMS தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!!! - ஆசிரியர் மலர்

Latest

28/06/2022

NMMS தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!!!

பெருந்துறை ஒன்றியம் வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் 2021-2022ம் கல்வியாண்டில் 8 ம் வகுப்பு பயின்ற மாணவர்களில் 20 பேர் மத்திய மாநில அரசுகள் நடத்தும் தேசிய உதவித் தொகைக்கான தேர்வினை ( NMMS EXAM ) கடந்த 05.3.2022 அன்று எழுதினார்கள்.
 NMMS EXAM முடிவுகள் 27.6.2022 தமிழக அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 20 மாணவர்களில் 20 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

  இப்பள்ளியின் மூன்று மாணவியர்கள் அதிக மதிப்பெண் ( 180 க்கு 155 , 153,144 ) பெற்று மாநில அளவில் முதல் , இரண்டு மற்றும் நான்காம் இடங்களை பெற்றுள்ளார்கள்.

இந்த 20 மாணவர்களும் மாதந்தோறும் ரூ. 1000 / - வீதம் நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்து அரசின் உதவித்தொகை பெறுவார்கள். வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளி ஈரோடு மாவட்டத்திலேயே அதிக மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459