மாணவியருக்கு மாதம் ரூ.1,000 விண்ணப்பிக்க அரசு அழைப்பு - ஆசிரியர் மலர்

Latest

28/06/2022

மாணவியருக்கு மாதம் ரூ.1,000 விண்ணப்பிக்க அரசு அழைப்பு

'அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, மேற்படிப்பில் சேரும் மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.


அரசு செய்திக் குறிப்பு:சமூக நலத் துறை சார்பில், ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவியருக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயம், பட்டப் படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில், இடைநிற்றல் இல்லாமல் படித்து முடிக்கும் வரை, மாதம், 1,000 ரூபாய், அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.இந்த மாணவியர் ஏற்கனவே, பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.



தகுதிகள்



 மாணவியர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தமிழக அரசு பள்ளிகளில் படித்து, தமிழகத்தில் உயர் கல்வி படிப்பவராக இருக்க வேண்டும்



 தனியார் பள்ளியில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்த பின், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்த மாணவியரும் பயனடையலாம்

 எட்டு அல்லது 10 அல்லது பிளஸ் 2 வகுப்புகளில் படித்து, முதன்முறையாக உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே, இத்திட்டம் பொருந்தும் தொலைதுாரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலையில் படிக்கும் மாணவியருக்கு, இந்த திட்டம் பொருந்தாது

 நடப்பு கல்வியாண்டில் புதிதாக மேற்படிப்பில், முதலாம் ஆண்டு சேர்ந்த பின், இணையதளம் வழியாக இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதர முதலாம் ஆண்டில் இருந்து, இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டில் இருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு மாணவியரும் பயன்பெறலாம்

   தொழிற்கல்வியை பொறுத்தவரை, மூன்றாம் ஆண்டில் இருந்து நான்காம் ஆண்டுக்கு செல்லும் மாணவியர், மருத்துவக் கல்வியை பொறுத்தவரை, நான்காம் ஆண்டில் இருந்து, ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர் பயன் பெறலாம்  கடந்த 2021 - 2022ம் ஆண்டில் இறுதியாண்டு படிக்கும் மாணவியர், இந்த திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனெனில், ஒரு சில மாதங்களில் அவர்கள் தங்கள் இளநிலை படிப்பை நிறைவு செய்து விடுவர் 

 இந்த திட்டத்தில், இளநிலை படிப்பு படிக்கும் மாணவியர் மட்டுமே பயனடைய இயலும். கூடுதல் விபரங்கள் பெற, '14417' என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் இளங்கலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும், இத்திட்டத்திற்காக புதிதாக உருவாக்கப்பட்ட, penkalvi.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக, தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459